இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சந்தோஷமான நிலை இருக்கும்.உடல் நிலையில் இருக்கும் பாதிப்புகள் விலகும். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். குழந்தைகள் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எந்த முயற்சி செய்தாலும் தடைகள் உண்டாகும். நண்பர்களிடம் மனக்கசப்பு உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பொறுப்பாக இருந்தால் கடன்கள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டில் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் மந்த நிலை இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் மனஸ்தாபம் இருக்கும். பகல் 3.26 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயலில் பொறுமையைக் கடைப்பிடித்தால் நிம்மதி ஏற்படும்.
கடகம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத அலைச்சல் டென்ஷன் இருக்கும். மருத்துவ செலவுகள் செய்யக்கூடும். சந்திராஷ்டமம் பகல் 3. 26 வரை இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் உற்சாகத்துடன் செய்வீர்கள். வீட்டில் அனைவருடனும் வெளியூர் செல்ல வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். கடன் தொல்லை தீரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். குழந்தைகள் பாசமாக இருப்பார்கள். சுப முகூர்தம் நடைபெறும். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் பணிச்சுமை தீரும்.
துலாம்
உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் முடிப்பதற்கு சிறு இடையூறு உண்டாகும்.உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகள் உண்டாகும்.ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக இருங்கள் அதுவே நல்லது. கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் ஆர்வமில்லாமல் செய்வீர்கள். வீட்டில் எதிர்பார்த்த செலவுகள் உண்டாகும். எளிதில் முடியும் காயம்கூட இழுபறி நிலையில் இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விட்டுக்கொடுத்து சென்றால் நன்மதிப்பை பெறுவீர்கள்.
தனுசு
உங்களின் ராசிக்கு திறமையால் வளர்ச்சி அடைவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.பெண்கள் புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். புதிய வீதியில் மேற்கொள்ளும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும். தர்ம காரியங்கள் செய்து மனதில் நிம்மதி அடைவீர்கள்.
மகரம்
உங்கள் இராசிக்கு எந்தக் காரியம் செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க வாய்ப்பு அதிகம். மருத்துவ செலவுக்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். குழந்தைகள் மூலம் மன கஷ்டம் உண்டாகும். தொழிலில் லாபம் சுமாராக இருக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான நிகழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். பணவரவு இருக்கும். பணி தேடுபவர்களுக்கு புதிய பணி அமையும். தொழில் ரீதியில் பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். சேமிப்புகள் உயரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் இருந்த ஒற்றுமை இன்னும் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடன் பிறந்தவர்களிடம் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் பழக்கத்தில் புதிய மாற்றங்கள் இருக்கும்.