மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி இன்று பிச்சாண்டார் கோயில் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்
பிரச்சாரத்தில் பரஞ்ஜோதி பேசும் போது :
தேர்தல் நேரத்தில் வியாபாரிகள் வருவார்கள் போவார்கள். பணத்தை மட்டுமே நம்பி அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் நான் உங்களை நம்பி வந்திருக்கிறேன்.
தாற்போது நான் 5வது முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
அதிமுக எனக்கு இத்தனை முறை வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு எனக்கு என்ன பலம் என்று கேட்டால், அனைவரிடமும் நான் நெருங்கி பழகுவதே என் பலம். பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதுதான் எனது பலம்.
கோடிக்கணக்கான பணத்தை கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்துடன் வந்துள்ள எதிர்கட்சி
வேட்பாளரையும் என்னையும் ஒப்பிட்டு பாருங்கள்.
உங்களுக்காக பணியாற்றுபவர் யாராக இருக்கும் என்று எண்ணி பாருங்கள். என்னை எளிதில் நீங்கள் அணுக முடியும்.
எதிர்கட்சிகாரர்களின் காம்பவுண்ட் கேட்டை கூட நீங்கள் நெருங்க முடியாது. இப்பகுதியில் குடியிருக்கும் நரிகுறவர்களுக்கு பட்டா வழங்கிட முயற்சி செய்வேன் என்றும் அவர் பேசினார்.
பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.