Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாக்சீடு தொண்டு நிறுவனம் மரக்கன்றுகள் நடப்பட்டது

0

 

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாப்பு தலைமையில் நடந்தது.

சாக்சீடு நிறுவன இயக்குனர் அருட். சகோதரி பரிமளா முன்னிலை வகித்தார்.ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் முகம்மது சாதிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். சாக்சீடு பணியாளர்கள் மற்றும் பயனாளிகளும் மரக்கன்றுகளை நட்டனர்.

சுற்றுசூழல் குறித்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிறைவாக அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார் சாக்சீடு இயக்குனர் அருட் சகோதரி பரிமளா.

நிகழ்ச்சியை டயஸ் தொகுத்து வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.