Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று உலக போலியோ ஒழிப்பு தினம்.

இன்று உலக போலியோ ஒழிப்பு தினம்.

0

'- Advertisement -

அக்டோபர் 24 ஆம் தேதி

உலக போலியோ ஒழிப்பு தினம்

மிகவும் அரியவகை வைரஸ் தாக்குதலால் உண்டாகும் நோய்தான் போலியோ.
இந் நோயானது உணவு மற்றும் நீர் மூலம் பரவும் தன்மையைக் கொண்டது. இந்த வைரஸால் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் ஏற்படுகிறது.

போலியோவை உலகிலிருந்து ஒழிக்கும் முயற்சியை உலக சுகாதார மையம் 1988ல் ஆரம்பித்தது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-ம் தேதியை போலியோ ஒழிப்பு தினமாக அனுசரித்து வருகிறது.

முதன் முதலாக, போலியோ சொட்டு மருந்து அளிப்பதன் மூலம், போலியோவை முற்றிலும் ஒழித்த நாடாகச் செக்கோஸ்-லோவாகியா விளங்கியது. அதைத் தொடர்ந்து, உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளிலும் போலியோ சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தியிருந்தது.

போலியோ நோய்க்கிருமிகள் மிக வேகமாகத் தொற்றும் தன்மையுடையவை. இது நரம்புமண்டலத்தைப் பாதித்த சில மணி நேரத்தில், பக்கவாதத்தை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நுண்கிருமி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கும். இந்தக் கிருமியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கை கால்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்துகிறது.

Suresh

இதைத் தடுப்பதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும். இந்நோய் வந்தால் அதைக் குணப்படுத்த எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது. இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதேயாகும். அவ்வாறு கொடுக்கும்போது போலியோ நோய் எதிர்ப்பு திறன் அனைத்துக் குழந்தைகளுக்கும் உருவாக்கப்படுகிறது.

2001 முதல் 2011 இடைப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 5,186 பேர். 2012-ம் ஆண்டு முதல் முழுவதுமாக போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.

1988-க்குப் பின் உலகம் முழுவதும் 99% போலியோ நோய் குறைக்கப்பட்டுள்ளது. 1.60 கோடிப் பேர் போலியோ நோய் தீவிரமடையும் முன் கண்டறியப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளனர். 15 லட்சம் குழந்தைகளின் இறப்பானது தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், மீண்டும் அந்தக் கொடிய நோய் வராமல் இருக்க நம்முடைய குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். மழலைப் பருவத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உள்ளது. எனவே, இளம் தாய்மார்கள் முடிந்தவரைத் தொடர்ந்து குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கவே கூடாது.

இந்திய அஞ்சல் துறையினர் மூன்று ரூபாய் மதிப்பில் போலியோ சொட்டு மருந்திற்கான நினைவார்த்த அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது என்பதை திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.