பிரதமர் ஆராய்ச்சி மாணவர் கூட்டுறவு திட்டத்தில் திருச்சி Nit மாணவர்கள் 2 பேருக்கு உதவித்தொகை அறிவிப்பு.
பிரதமர் ஆராய்ச்சி மாணவர் கூட்டுறவு திட்டத்தில் திருச்சி Nit மாணவர்கள் 2 பேருக்கு உதவித்தொகை அறிவிப்பு.
திருச்சிராப்பள்ளி ஆராய்ச்சி மாணவர்கள் இரண்டு பேருக்கு உதவித்தொகை
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஆராய்ச்சி தரத்தினை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட
பிரதமர் ஆராய்ச்சி மாணவர் கூட்டுறவுத் திட்டத்தின் கீழ் என்.ஐ.டி
திருச்சிராப்பள்ளி ஆராய்ச்சி மாணவர்கள் இரண்டு பேருக்கு உதவித்தொகை
அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 -2019 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட
இந்த திட்டம் முதலில் IISc , IISER , IIT மட்டும் வழங்கப்பட்ட
நிலையில், அனைத்து தேசிய பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 25 இடங்களை
வகிக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
ஆறு மத்திய பல்கலைக்கழகங்களுடன் என்.ஐ.டி திருச்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உதவிபெறும் ஒரே என்.ஐ.டி , என்.ஐ.டி திருச்சி
என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஆண்டு அனுமதிக்கப்பட்ட ஆராய்ச்சி மாணவர்களிடமிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட 15 விண்ணப்பங்கள் பிரதமர் ஆராய்ச்சி மாணவர்
கூட்டுறவு திட்டத்தின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்பட்டதில் இரண்டு
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வேதிப் பொறியியல் ஆராய்ச்சி மாணவர் M.A .சுந்தரமகாலிங்கம் மற்றும்
மின் மற்றும் மின்னணு பொறியியல் ஆராய்ச்சி மாணவி மெர்லின் மேரி N
J ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது .
M .A . சுந்தரமகாலிங்கம் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் இளங்கலை
மற்றும் முதுகலை பட்டம் பெற்று தற்போது என்.ஐ.டி திருச்சி வேதிப்
பொறியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். முனைவர் P. சிவசண்முகம்
(HAG ), பேராசிரியர், வேதிப் பொறியியல் துறை,என்.ஐ.டி திருச்சி அவர்களின்
வழிகாட்டுதலில் உணவு தொழிற்துறை கழிவு மேலாண்மை மற்றும் அதன்
உயிரியக்கவியல் என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சித் திட்டத்தை
சமர்பித்துள்ளார். இது “வீணாகாத செல்வம் மற்றும் கழிவற்ற
தொழில்நுட்பம்”-என்ற நோக்கத்தை தற்கால சிகிச்சை ஆலைகள் கொண்ட
தொழிற்துறைகள் மையமாகக் கொண்டுள்ளது.
மெர்லின் மேரி திருச்சி என்.ஐ.டி மின் மற்றும் மின்னணு
பொறியியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார். முனைவர்.ஷீலாஸ்
சத்தியன், துணை பேராசிரியர் , மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை ,
என்.ஐ.டி திருச்சி அவர்களின் வழிகாட்டுதலின் படி மின் வாகனங்களில்
பயன்படுத்த கூடிய மேம்பட்ட மின்கலங்கள் வடிவமைப்பினை மையமாகக் கொண்ட
ஆராய்ச்சி கட்டுரையினை சமர்ப்பித்துள்ளார்.மின் வாகனங்கள்
சுற்றுச்சூழலின் மாசுகளை குறைக்க உதவும்.இந்த வகை மின்கலங்கள் விரைவு
மின்னேற்ற நேரத்தை கொண்டுள்ளவை ஆகும். இந்த ஆராய்ச்சியின் மூலம் மேம்பட்ட
மின்வாகன சார்ஜ்ர்கள் உற்பத்தி செய்ய முடியும்.மேலும் இந்த
வடிவமைப்பிற்கு காப்புரிமை பெறவும் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் ஆராய்ச்சி மாணவர் கூட்டுறவு திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி
மாணவர்களுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ₹70,000 மூன்றாம் ஆண்டு
மாதம் ₹75 ,000 மற்றும் நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டில் மாதம் ₹80,000
ஊக்க தொகையாக வழங்கப்படும்.
இவை தவிர ஆண்டுக்கு ரூ. 2 இலட்சம்
வரை ஆராய்ச்சி மானியம்,தங்களது படிப்பு செலவுகள் மற்றும் தங்களது
உள்நாட்டு/வெளிநாட்டு பயணங்களுக்கும் ஈடு செய்ய மாணவர்கள்
பெற்றுக்கொள்ளலாம்.
இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் துறை தலைவர்கள் மற்றும்
வழிகாட்டி பேராசிரியர்கள் முனைவர் சிவசண்முகம்(HAG ), பேராசிரியர்,
வேதிப் பொறியியல் துறை மற்றும் முனைவர். ஷீலாஸ் சத்தியன், துணை
பேராசிரியர் , மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை அவர்களை
பாராட்டினார், மேலும் ஊக்க தொகை பெற்ற மாணவர்கள், சமூகத்திற்கு தங்கள்
பங்களிப்பினை வழங்க கடினமாக முயற்சி செய்வர் என்றார்.