வங்கிகள்,நிதி நிறுவனங்கள் வசூலித்த 6 மாத வட்டியை திருப்பித்தர மத்திய அரசு உத்தரவு.
வங்கிகள்,நிதி நிறுவனங்கள் வசூலித்த 6 மாத வட்டியை திருப்பித்தர மத்திய அரசு உத்தரவு.
6 மாத கடன்களுக்கான அபராத வட்டி தள்ளுபடி: மத்திய அரசு
வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கடனுக்கான மாதந்திர தவணைகளை செலுத்துவதில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்ட கால கட்டத்திற்கான வட்டி மீதான அபராத வட்டியை (கூட்டு வட்டியை) ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது.
கொரோனா பொது முடக்கநிலை காரணமாக அறிவிக்கப்பட்ட கடன் தவணைகள் மீதான தற்காலிக செயல் நிறுத்த திட்டத்தில் (extension of the moratorium) சேர்ந்த பயனாளிகளுக்கும் , சேராதவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்தது.
2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மார்ச்1, 2020 – ஆகஸ்ட் 31 ஆகிய தேதிகளுக்கிடையே நிலுவையில் உள்ள, அனைத்து விதமான குறித்த கால வங்கிக் கடன்களுக்கும் இந்த திட்டம் செயல் முறைப்படுத்தப்படுகிறது.
“பிப்ரவரி 29 ஆம் தேதி நிலவரப்படி, ரூ.2 கோடி வரையில் கடன் பெற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபா் கடன்தாரா்களுக்கு மட்டும் இந்த அபராத வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி செய்யப்படுகிறது. மார்ச் 1 ஆம் தேதியன்று தரநிலை சொத்துகளாகக் குறிப்பிட்டிருந்த அனைத்து கணக்குகளுக்கும் இந்த வசதி கிடைக்கும்
வீட்டுக் கடன், கல்வி கடன்கள், கிரெடிட் கார்டு பாக்கிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த கடன்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். எந்தத் துறையாக இருந்தாலும், கடனின் தன்மை எதுவாக இருந்தாலும் இந்தத் திட்டம் பொருந்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இதையும் புரிந்து கொள்ள வேண்டும்:
வட்டி மற்றும் வட்டிக்கான வட்டி (கூட்டு வட்டியை அல்லது அபராத வட்டி ) ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை புரிந்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்ட தடைச் சலுகை காலத்தில், நிலுவையில் உள்ள கடனுக்கான வட்டியை நீங்கள் கட்டயாம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, உங்களுடைய கடன் நிலுவைத் தொகை ரூ .50 லட்சமாக இருந்து, கடனுக்கு 8 சதவீத வட்டி விதிக்கப்படுவதாக இருந்தால் (தவனைக் காலம், 19 ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம், அதாவது 228 மாதங்கள்) ஆறு மாத கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்ட தடைச் சலுகை காலத்தில் உள்ள ரூ .2 லட்சம் வட்டிப் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
வங்கிகள் இந்த ரூ.2 லட்சம் வட்டிப் பணத்திற்கான கூட்டு வட்டித்தொகையை (வட்டிக்கான வட்டி அல்லது அபராத வட்டி ) வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்காது. வங்கி தவணையை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசத்திற்கு வட்டியை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது