Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் கூட்டம்

0

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் தலைமை நிர்வாகிகள் குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அல்தாஃபி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்தம், குடியுரிமை சட்ட திருத்தம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, நீட்தேர்வு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அடிமை சேவகம் செய்து வரும் அதிமுக அரசை கண்டித்தும், மேலும்
மக்கள் மத்தியில் மத ரீதியாக பிளவுபடுத்தி
இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்
பிஜேபி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும். எனவும் ஜனநாயகத்தை , இந்திய இறையாண்மையையும் பாதுகாக்க போராடி வரும் விடுதலை சிறுத்தை , கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி , மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்த திமுக கூட்டணியை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் முழு ஆதரவு அளிக்கின்றோம். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கோரிக்கைகளாக குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அறிவிக்கப்படவேண்டும் இதன் மூலம் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்.
திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. எனவே திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை? திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வைக்கிறோம்.

இந்த கூட்டம் மாநில தலைவர் அல்தாஃபி தலைமையில் நடைபெற்றது.

மேலும் பொது செயலாளர், பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.