Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பால் நிறுவன ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில்
தனியார் பால் நிறுவன ஊழியரிடம் கத்தி முனையில் செல்போன் பணம் பறிப்பு.

TVK ad

பிரபல ரவுடி கைது

திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (வயது 31). இவர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பால் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் அந்த பால் கம்பெனி அருகாமையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது என கேட்டார்.
அதற்கு பதில் அளிப்பதற்குள் அந்த நபர் கத்தி முனையில் விக்னேஷின் விலை உயர்ந்த செல்போன் வெள்ளி செயின், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றார்.

இது குறித்து விக்னேஷ் குமார் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி இபி ரோடு ஒப்பிலியர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி புலி என்கிற புலித்தேவன் (வயது 25) என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.