Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்புமனு தாக்கல். மாற்று வேட்பாளராக வைரமணி மனு தாக்கல் .

0

'- Advertisement -

 

Ad banner

பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அருண் நேரு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோதல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண் நேரு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது, தொட்டியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந. தியாகராஜன், பெரம்பலூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

TVK ad

இவருக்கு மாற்று வேட்பாளராக, திருச்சி மத்திய மாவட்டச் செயலா் வைரமணி வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது, குளித்தலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கலைச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, பெரம்பலூா் பாலக்கரையிலுள்ள திமுக அலுவலகத்திலிருந்து வேட்பாளா் அருண் நேரு கட்சி தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்தாா். அவருடன், அமைச்சா் கே.என்.நேரு, முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.