திருச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது .
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க (சிஐடியூ) மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை
மாநில பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன்
வாசித்தார்.
கூட்டத்தில் 2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவ கால பணியாளர்களை தேர்தல் தேதி அறிவிப்பதற்கும் முன்பாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்து ஒரு மாதம் ஆகியும் இயக்கம் செய்யாமல் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய வேண்டும், காலதாமத இயக்கத்தால் ஏற்படும் எடை குறைவிற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியை வெற்றி பெற செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் முழுமையாக பாடுபடும்,
நவீன தாராளமயத்தை மூர்க்க தனமாக அமலாக்கி பொது விநியோக முறையை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை முறியடிக்கும் வகையில் வரும் பாராளுமன்ற தர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.