திருச்சி பாஜக பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் துவாக்குடியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் .
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் துவாக்குடி மண்டல் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ குழுவினர் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் துவாக்குடி மண்டல தலைவர் விஜய் ஆனந்த், திருவெறும்பூர் மண்டல தலைவர் செந்தில்குமார், அரியமங்கலம் மண்டல தலைவர் சண்முக வடிவேல், சட்டமன்ற இணை பொதுச் செயலாளர் சிட்டிபாபு, மாவட்டச் செயலாளர் ரவிக்குமார்
,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜராஜன் ,
இந்திரன், முன்னாள் மண்டல தலைவர்கள் சுரேஷ், ஆச்சியப்ப ராஜா ரவிக்குமார் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.