
காந்தி மார்க்கெட்டில் வீடு புகுந்து பேக்கரி கடை உரிமையாளர்மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது புகார் .
திருச்சி மேற்கு விஸ்வாஸ் நகர் ஆறாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 70) இவர் காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் இரவு பேக்கரியை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார் .பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினார்.
இந்த நிலையில் நள்ளிரவு யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார் .பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவரை சிலர் சுற்றி வளைத்து தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் அவரது தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது

பின்னர் இது குறித்து செல்வகுமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

