ஸ்ரீ ராமஜென்ம பூமி
மினியேச்சர் அஞ்சல் தலை திருச்சியில் விற்பனை.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவில் ஆறு நினைவு தபால் தலைகள் அடங்கிய குறுவடிவ மினியேச்சர் ஷீட் தபால் தலை தபால் துறையால் அச்சிடப்பட்டதை ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட தபால் தலை திருச்சி தலைமை அஞ்சலக தபால்தலை சேகரிப்பு மையத்தில் விற்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் , செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூக ஆர்வலர் அய்யாரப்பன் உட்பட பல அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் குறு வடிவ ஸ்ரீ ராமஜென்ம பூமி மினியேச்சர் ஷீட் தபால் தலையினை வாங்கினார்கள்.
ஸ்ரீ ராமஜென்ம பூமி மினியேச்சர் தபால் தலை குறித்து திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செய்லர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கூறுகையில்:-
ஸ்ரீ ராமஜென்ம பூமி மினியேச்சர் தபால் தலை முப்பது ரூபாய் மதிப்புடையது ஆகும் இந்திய அஞ்சல் துறை மறு அறிவிப்பால் 100 ரூபாய்க்கு தபால்தலை சேகரிப்பு மையத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. நீர், மண் மற்றும் சாந்தன் ஆகிய உறுதியான கூறுகள் அயோத்தியிலிருந்து விமானத்தில் அச்சகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தபால்தலை அச்சிடப் பயன்படுத்தப்படும் மையில் கலக்கப்பட்டதாகும். மினியேச்சர் அஞ்சல் தலையில் மொத்தம் ஆறு வடிவமைப்புகள் உள்ளன. சூரியனின் பின்னணியில் ராமர் கோயிலின் முன்பக்கக் காட்சி முதன்மை தபால்தலையாக இருந்தாலும், கோயிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர், அனுமன் மற்றும் ஜடாயு சிலைகளின் படங்கள் மூன்று வடிவமைப்புகளாகும். தொகுப்பில் உள்ள மற்ற இரண்டு தபால் தலைகள் சுவரோவியங்களைக் காட்டுகின்றன.
ஸ்ரீராம் ஜென்மபூமி கோயில் என்று அழைக்கப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முத்திரை ரத்து செய்யப்பட்ட மினியேச்சர் ஷீட் மற்றும் முதல் நாள் உறையும் விற்கப்படுகிறது. 70 ஏக்கர் வளாகத்தில் ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயிலின் கட்டுமானம், நவம்பர் 9, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
கோவில் பண்டைய நாகரா கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து பிங்க் பன்சி பஹர்பூர் கற்களைக் கொண்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது 2.77 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
161.75 அடி உயரத்தில், 380 அடி நீளமும், 249.5 அடி அகலமும் கொண்ட மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த ஆலயம் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், குத் மண்டபம், கீர்த்தன் மண்டபம் மற்றும் பிரார்த்தனை மண்டபம் ஆகிய ஐந்து மண்டபங்களைக் கொண்டுள்ளது.
தரை தளத்தில் 166 தூண்கள், முதல் தளம் 142, மற்றும் இரண்டாவது தளம் 82, இதில் ஒவ்வொரு தளத்திலும் 6 மக்ரானா மார்பிள் தூண்கள், 10,000க்கும் மேற்பட்ட நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கருப்பொருளுடன் அமைக்க பட்டுள்ளன.
ராம நவமியின் நாளில், ஸ்ரீ ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் இடத்தில், ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) வடிவமைத்த பொறிமுறை கோவிலின் சிறப்பு அம்சமாகும். இந்த தருணத்தை தனித்துவமாக்க, அஞ்சல் துறை ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயில் ஆறு நினைவார்த்த தபால் தலைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளது.
தபால்தலைகள் தெய்வீகத்தின் நறுமணத்தைக் குறிக்கும் சந்தன மரத்தின் வாசனையைக் கொண்டுள்ளன என்றார்.