Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஏஐடியூசி தரைக்கடை வியாபாரிகள் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .

0

'- Advertisement -

 

Ad banner

தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை கொடுத்து வியாபாரக் குழுவினை நடத்திடக் கோரியும் ,
வியாபாரக் குழுவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திடக் கோரியும் ,
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரியும் திருச்சி மாவட்ட எஐடியூசி தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று 6.2. 2024 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாவட்ட பொருளாளர் S.சையது அபுதாஹிர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஐடியூசி மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் க. சுரேஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்கள்.

மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், பொன்மலை பகுதி செயலாளர் ராஜா, திருவரம்பூர் தரைக்கடை சங்க செயலாளர் பழனிச்சாமி. மாவட்டத் தலைவர் எஸ். சிவா, ஏ ஐ டி சி மாவட்ட தலைவர் வே. நடராஜா உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் எம். மருதாம்பாள், நிர்மலா எம். ரஸியா பேகம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், சந்தோஷ் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். செல்வகுமார், என் எஸ் பி ரோடு அருண், முஸ்தபா, தெப்பக்குளம் வழக்கறிஞர். பெருமாள் உமர், நந்தி கோவில் தெரு சரவணன் உள்ளிட்ட தரைக்கடை வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

 

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.