சமூக நீதி பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் திருச்சி ரவி மினி ஹாலில்
தி.மு.க.ஆட்சி மலர வேண்டும் – ஏன்? என்ற மாபெரும் கருத்தரங்கில் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு திராவிட முன்னேற்ற கழகம்ஆட்சி அமைப்பது ஏன் என்பதை குறித்தும், தமிழகத்தை தற்போது சூழ்ந்துள்ள ஆபத்துகளை பட்டியலிட்டும் எழுச்சியுரையாற்றினார்.
வேலை வாய்ப்பு பெருகவும், நீட், புதிய கல்வி கொள்கை போன்ற சமூக நீதிக்கு எதிரான சட்டங்களை எதிர்க்க வேண்டியதன் தேவை குறித்தும் கருத்துரையாற்றினார்.
பாசிச மதவாத, அடிமை சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்கவும், தமிழக உரிமைகளை மீட்டெடுக்கவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று சூளுரைத்தார்.
இக்கருத்தரங்கில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், புதிய குரல் தோழர் ஓவியா, திராவிடர் தமிழர் கட்சித் தோழர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவைத் தோழர் விடுதலைச் செல்வன், தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர் கா.சு.நாகராசன், திராவிடர் இதழ் தோழர் கோவை பாபு, பெரியார் சிந்தனைக் கழகத் தோழர் புதுவை தீனா, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கத் தலைவர் மதிவாணன், ‘காட்டாறு’ தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள்.
ஆரோக்கியராஜ், மா.சி.அறிவழகன், மு.மனோகரன், இளமதி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, தோழர் ஆ.மணிவண்ணன் தலைமை வகித்தார். பிரவீன் நன்றியுரை வழங்கினார்.
திராவிட முன்னேற்ற கழகம் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் எடுத்துறையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில்அனைத்துக் கட்சியை சார்ந்த தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.