திருச்சி மாநகர் மாவட்ட
மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு
மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினர்.
திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா உறையூர் அமைப்பில் நடைபெற்றது. விழாவிற்கு உறையூர் மாவட்ட பிரதிநிதி மகாலிங்கம் தலைமை தாங்கினார். சரவணன், சிவகுமார், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளார் தர்மலிங்கம், பொருளாளர் முருகேசன், துணை செயலாளர் மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் வைத்து மருத்துவ சங்கத்தின் சார்பாக உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் பாத்திரம் ,அரிசி, சர்க்கரை, வெல்லம் ,முந்திரி திராட்சை போன்ற பொங்கலுக்கு தேவையான தொகுப்புகளை வழங்கினர்.
விழாவில் அசோக் ,
அறிவழகன், தங்கமணி, ரங்கநாதன்,
உலகநாதன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.