Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு திடலில் குவிந்த 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்.

0

  • ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கும் அனைத்து போட்டியிலு
    ம் வெற்றி பெற்று வாகை சூட வேண்டும் என்ற வேண்டுதலோடு விராலிமலை அருகே உள்ள திருநல்லூர்
    (தென்னலூர்)
    முத்துமாரியம்மன் கோயில் முன் உள்ள ஜல்லிக்கட்டு திடலில் 500க்கும் மேற்பட்ட காளைகள் குவிந்தன.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மத்திய தமிழகத்தில் பிரபலமாகும்.

    முன்னாடி 13 தொழுவங்களில்
    (வாடிவாசல்)
    ஜல்லிக்கட்டு காளைகள் அடைக்கப்பட்டு ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும் அதை தழுவ தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அங்கு திரளுவார்கள்.

    தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறையால் அந்த நிலை தற்போது மாற்றப்பட்டு ஒரு வாடி வாசலில் மட்டும் அடைக்கப்பட்டு வருகிறது

    அப்பகுதிகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை முதலில் தென்னலூரில் அவிழ்த்த பிறகுதான் மற்ற வாடிவசலில் அவிழ்ப்பது என்பதை இன்று வரை ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் கடைபிடித்து வரும் நிகழ்வாகும்.

    அந்த வகையில் புத்தாண்டு தினமான நேற்று தமிழகத்தின்
    பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அழைத்து வந்து காளை உரிமையாளர்கள் வழிபாடு நடத்தினர்.

    இந்த நிலையில் காளைகள் குவிந்தது அறிந்த மாடுபிடி வீரர்கள் காளைகள் அவிழ்க்கப்படுமா.. காளைகளை தொட்டு தழுவலாமா என்ற ஆர்வத்தில் காத்திருக்கின்றனர். இருப்பினும், காளைகளை அவிழ்க்க கூடாது என்று கோயில் நிர்வாகம் காளை உரிமையாளர்களிடம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் வழிபாடு நடத்தி சென்றுள்ளது. இருப்பினும் தொடர்ந்து காளைகள் வந்த வண்ணம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.