திருச்சியில் நடைபெற்ற தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாட்டில் ஜனவரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை அழைத்து கோரிக்கைகளை முன் வைப்போம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்
தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு இனை ஒருங்கிணைப்பாளர் டேவிட் விக்டர் வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் இனிகோ தலைமை தாங்கினார், மாநாட்டில் நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், ஐசக் டேவிட், திருநாவுக்கரசு, பாலச்சந்தர், ஈஸ்வரன், பாரதிதாசன் அமிர்தராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளைமாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி வலியுறுத்தி பேசினார். மாநாட்டில்
தமிழ்நாடு அரசு 1991-1992ம் ஆண்டில் பணியாற்றிய தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு பணியாற்றிய நாட்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கிய பணிக்காலமாக மாற்றி கொடுத்தது போல 2003-2006 ம் ஆண்டு பணியாற்றிய தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் பணியாற்றிய நாட்களை பணிக்காலமாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தல்,
வருகிற ஜனவரி 2024 ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் கோரிக்கை மாநாட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சரை அழைத்து கோரிக்கைகளை முன் வைப்பது என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.