பட்டா நிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கட்ட அனுமதி வழங்க வேண்டும். தமிழக முதல்வருக்கு ஐ.சி.எப் பேராயம் – கோரிக்கை
திருச்சி ஐ.சி.எப் பேராயம் கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேராயம், தலைவர் பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பட்டாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபைகள் அமைக்க, கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டு சிறுபான்மை கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டு உரிமைகளை நிறைவேற்ற வேண்டும், ஐ.சி. எப். பேராயம் கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை சார்பில் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.