திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செயல் ஒருங்கிணைப்பாளர்கள் தலைவர் அசோக், பொது செயலாளர் பத்ரி நாராயணன், பொருளாளர் சேது நாராயணன், மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.