Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் பிங்க் கிராஸ் சொசைட்டி தொடக்கம்.

0

'- Advertisement -

 

கடந்த 13 ஆண்டுகளாக புற்றுநோய் மருத்துவத் துறையில் தன்னிகரற்று செயல்பட்டு வரும் திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, புற்றுநோய் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

அதன் ஒரு தொடர்ச்சியாக, மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவிகள் வழங்கிடுவதற்காகவும் பிங்க் கிராஸ் சொசைட்டி என்கின்ற ஒரு புதிய தன்னார்வல அமைப்பை தொடங்கியுள்ளது.
இந்த பிங்க் கிராஸ் சொசைட்டி என்கின்ற அமைப்பானது புற்று நோய்க்கு எதிரான போரில் மிகப்பெரிய பங்கை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இந்த அமைப்பில் தன்னார்வலர்களாக இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிவதற்காக கல்லூரி மாணவ மாணவிகளையும், சமூக சேவகர்களையும் பிங்க் கிராஸ் சொசைட்டி வரவேற்கின்றது.
இதற்கான ஆரம்ப விழா இன்று ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் இந்த பிங்க் கிராஸ் சொசைட்டியின் முதல் படிவத்தினை வெளியிட்டு ஜமால் முகமது கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில், ஜமால் முகமது கல்லூரியை சார்ந்த
ஹாஜி ஜமால் முஹம்மது பிலால் தலைவர்
ஹாஜி ஜமால் முஹம்மது பொருளாளர்
காஜா நிசாமுதீன், செயலாளர்
அப்துல் சமத், இணை செயலாளர்
அப்துல் காதர் நிஹால் ,
இயக்குனர்
ஹஜிரா ஃபாத்திமா. இயக்குனர் விடுதி காப்பாளர்
முகம்மது இஸ்மாயில் ஹசானி,
ஆலோசகர் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கம்
ஷேக் இஸ்மாயில் மற்றும் அப்துல் ரஷீத் ஹசானி
மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ்வர்தணன்,

மற்றும் இந்த பிங்க் கிராஸ் சொசைட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவா அருணாச்சலம் மற்றும் செல்வி நற்றினை ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த பிங்க் கிராஸ் சொசைட்டியில் இணைந்து மக்களுக்கு தொண்டாற்றும் தன்னார்வலர்களுக்கு ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்
ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.