திருவெறும்பூர் கல்லணை சாலை அமைச்சரின் அறிவுறுத்தலின் படி ஆய்வு.
திருவெறும்பூரில் இருந்து கல்லணை செல்லும் சாலை பாதாள சாக்கடை பணிக்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டி சாலைகள் பழுதடைந்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின் படி மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் பணி ஆரம்பிப்பது குறித்தும் பணியின் விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
ரு. 47 இலட்சம் மதிப்பில் பணி இன்னும் சில தினங்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் 18.12.2023 முடியும் என நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அசோக் குமார் கூறினார்.
இந்நிகழ்வின் போது மாமன்ற உறுப்பினரும் பகுதி கழக செயலாளருமான சிவகுமார் ,
திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டலம் மூன்றின் செயற்பொறியாளர் அப்பகுதியில் வட்டக் கழக செயலாளர் அருண்குமார் ஆய்வின் போது உடன் இருந்தனர்.