திருச்சியில்
போதை பொருட்கள் விற்ற முதியவர் கைது.
திருச்சி-மதுரை ரோடு ராமகிருஷ்ணா மேம்பாலம் பகுதியில் தடையை மீறி போதை தரும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடையை மீறி போதை தரும் புகையிலை பொருட்கள் பெற்றதாக ஜீவா நகரை சேர்ந்த சம்பத் என்ற முதியவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி பாலக்கரை அரசமரத்தடி பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா விற்றதாக அல்லா பிச்சை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.