Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஐயப்பன் கோயில் 5வது மகா கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது

0

 

திருச்சி அய்யப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அய்யப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் 5-வது கும்பாபிஷேக விழா இன்று நடைபெறறது. இதையொட்டி 39-வது மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் (6-ந் தேதி) மகா அன்னதானம் நடைபெற்றது. இதில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

பூா்வாங்க பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று( 8 ந்தேதி) (வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர் இதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது..கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு இருந்தது.

இதைத்
தொடா்ந்து நாளை (டிச.9-ந்தேதி) தொடங்கி 14ந் தேதி வரை அய்யப்பனுக்கு பிரம்மோத்சவ பூஜைகளை சபரிமலை பிரதான தந்திரி கண்டரு மோகனரு நடத்தவுள்ளாா்.
முன்னதாக நாளை (9ந்தேதி) சனிக்கிழமை காலை 8 மணிக்கு வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் மண்டல பூஜை முடியும் வரை தினமும் பூஜைகள், அபிஷேகம், லட்சாா்ச்சனை, பக்திச் சொற்பொழிவு, மற்றும் இன்னிசை நிகழ்வுகள் நடைபெறுகிறது
விழா நாட்களில் தினமும் காலை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஐயப்ப சங்கத்தினா் செய்து வருகின்றனர்.

அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.