விடியா திமுக அரசை கண்டித்து 300 இடங்களில் ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி தெற்கு மாவட்டத்தில்
திமுக அரசை கண்டித்து 300 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர், அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா, ஒன்றிய செயலாளர்கள் ராவணன், சூப்பர் நடேசன், பொன்னுச்சாமி எஸ்.கே.டி.கார்த்திக், பழனிசாமி, நகர செயலாளர்கள் பவுன் ராமமூர்த்தி, பாண்டியன், பேரூர் செயலாளர்கள் முத்துக்குமார், சாமிநாதன்,பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், தண்டபாணி, அணி செயலாளர்கள் அருண்நேரு, பெல் கார்த்திக் ,ராஜா மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தி, விஜயா மற்றும் பிரதான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத்து கமிட்டி அமைப்பதற்கு அடித்தளமிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வது,
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற களப்பணியாற்றுவது, அதை தொடர்ந்து நடைபெற உள்ள உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல் தேர்தல்களில் 100 சதவீதம் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 300 இடங்களில் திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி துண்டு பிரசுரங்கள் வழங்குவது ,
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து லால்குடி, மணப்பாறை, திருவெறும்பூர் தொகுதிகளில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது,
மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு, வாகனங்களுக்கு பதிவு கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என மக்கள் விரோத ஆட்சி நடத்தும்ம் திமுக ஆட்சியை அகற்றி, எடப்பாடியை முதல்வராக்க பணியாற்ற சபதம் ஏற்போம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.