
ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். செயலாளர் மக்காகலீல், துணை தலைவர்கள் முகமது யூசுப் முகமது பாரூக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்
ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தை தமிழக அரசு சிறுபான்மை
துறை அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.
உம்ரா புனித பயண ஏற்பாட்டாளர்களுக்கு தொழில் உரிமச் சான்றிதழ் வழங்கி முறைப்படுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்வது.
நடைமுறை சாத்தியமற்ற விளம்பரங்கள் செய்து, ஹாஜிகளை ஏமாற்றியும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படும் போலி நிறுவனங்களை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வோடு இருக்குமாறு சமுதாய மக்களை கேட்டுக் கொள்வது.
போலி நிறுவனங்களை கண்டறிந்து முறைப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது.
இந்தியாவில் பல பெரு நகரங்களிலிருந்து இயக்குவது போன்று சென்னையிலிருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்கிட வேண்டுமென்று ஏர்இந்தியா, மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களை இச்சங்கத்தின் மூலம் வலியுறுத்தி அணுகிட வேண்டும்.
இப்புனித பயண ஏற்பாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கட்டணத்தைவிட பயண நேரத்தில் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தும், ஒப்பந்தம் செய்யப்பட்ட சேவைகளில் குறைகள் செய்தும், மக்களை ஏமாற்றும் நிறுவனங்களை அடையாளப் படுத்தி, மேலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

