திருச்சி கே.கே .நகரில் பல ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் அருவி முதியோர் இல்லத்தில் மகிழ்வொளி தீப ஒளி திருநாள் விழா கொண்டாடம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக துணை காவல் ஆணையர் வடக்கு அன்பு திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர். அருள்ராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர். பால்குணா லோகநாதன், தண்ணீர் அமைப்பின் இணை செயலாளர் மற்றும் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் கவுரவ தலைவர் ஆர். கே. ராஜா, தமிழக பண்பாட்டு கழக நிறுவனர் மற்றும் தலைவர் ஜாகிர் உசேன், அக்னி சிறகுகள் தொண்டு நிறுவன இயக்குநர் மகேந்திரன், புதுவாழ்வு சமூகநல அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு குருதி கொடையாளர் கூட்டமைப்பின் தலைவர் பிளட்ஷாம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் முதியோர்களுக்கு புத்தாடைகள் இனிப்புகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள்.
இறுதியில் அவர்களோடு இணைந்து உணவு அருந்தி அவர்களுடன் அன்பை பரிமாறி கொண்டனர்.
நிகழ்வின் ஏற்பாடுகளை அருவி முதியோர் இல்லத்தில் நிர்வாக இயக்குனர் சையத் தாஹா மற்றும் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் ஊழியர்கள் சிறப்பாக செய்தனர்..
அருவி முதியோர் இல்லத்தில் நிர்வாக இயக்குனர் சையத் தாஹா நன்றி உரையோடு இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது..