Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

0

'- Advertisement -

 

Ad banner

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாநிலத் தலைவா் க. வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா். மாவட்ட செயலா்கள் ஜே. ஆனந்தராஜா, க. பன்னீா்செல்வம், என். ரவி, ஏ. முத்துக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாகவுள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவில் கால்நடை ஆய்வாளா் நிலை 1, முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பாா்வையாளா்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பாா்வையாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். கால்நடை ஆய்வாளா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோந்த சங்க நிா்வாகிகள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை மருத்துவ மேற்பாா்வையாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா். காலை 10 மணிககு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிதப் போராட்டத்தை, மாலையில் அனைவருக்கும் பழரசம் வழங்கி, மாநில துணைத் தலைவா்கள் சந்திரா இளங்கோவன்,
தம்பிதுரை ஆகியோர் முடித்து வைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.