15 நாட்களுக்கு மேலாக கொத்தப்பட்ட சாலையால் பொதுமக்கள் அவதி.உடனடியாக தார் சாலை அமைக்க திருச்சி மக்கள் சக்தி இயக்கதினர் கோரிக்கை.

திருச்சி ஜெயில் கார்னர் இருந்து பொன்மலையடிவாரம் செல்லும் கொத்திய சாலை. விரைவாக சாலையை போட வேண்டும் என கோரிக்கை.
பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகல படுத்தும் வேலை நடக்கிறது. நன்றாக இருந்த நடு பகுதி ரோட்டை கொத்தி தார் சாலை அமைக்க போவது நன்று.
கடந்த பதினைந்து தினங்களுக்கு மேலாக கொத்திய சாலையில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயமும், பெண்கள் அவ்வழி செல்ல அச்சப்படுகின்றனர். வாகனத்தின் டயரும் நிலை குலைந்து போகிறது.

வேலை ஆரம்பிக்கும் இரண்டு நாள் முன்பாக செய்ய வேண்டிய வேலையை இப்படி 15 நாட்கள் மேலே ஆகியும் வேலை ஆரம்பிக்காமல் அலட்சியமாக இருப்பதும், பொது மக்கள் அவதி படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

