Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே டி எம் மளிகை கடை கொள்ளை சம்பவ முக்கிய குற்றவாளி கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி.

0

'- Advertisement -

 

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கே.டி.எம் மளிகை கடை இயங்கி வருகின்றது. இந்த கடையின் உரிமையாளர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி கடையில் வசூலான ரூ.37.50 லட்சம் ரொக்கத்தை கடை ஊழியர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஷாஜகான் ஆகியோரிடம் கொடுத்து ஜங்சன் அருகே உள்ள வங்கி ஒன்றில் வரவு வைக்க அனுப்பியிருக்கின்றார்.


கிருஷ்ணகுமார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஷாஜகான் இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து தலைமை தபால் நிலையம் சென்றுக்கொண்டிருந்தபோது அங்கு சிக்னலுக்காக ஆட்டோ நின்றுக்கொண்டிருந்தது. அப்போது, நவீன இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் அருவாளை காட்டி ரூ.37.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முத்தரசநல்லூரை சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி சூர்யா, வரகனேரி பகுதியை சேர்ந்த அன்சாரி, காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்த நிலையில், சூர்யாவை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த கொள்ள வழக்கில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கின்ற சில குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருச்சி கண்டோண்மெண்ட் காவல் நிலையத்தை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனிடையே திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் கடந்த 19-ம் தேதி இந்த வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த கொள்ள சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பகுதியை சேர்ந்த மிட்டாய் பாபு என்பவரை போலீஸார் தேடி வந்தனர். இதில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க மிட்டாய் பாபு இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்ல முயன்ற போது சாலையில் சறுக்கி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸார் மிட்டாய் பாபுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிட்டாய் பாபு என்பவர் மீது திருச்சியில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.