Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை.

0

'- Advertisement -

திருச்சி அடுத்த நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சிலர் ஆடுகளை திருடிச்சென்றதை கண்டு துரத்தியுள்ளார். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது19), 9 மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட மூவரை கைது செய்தனர்.

சிறுவர்கள் மீதான தனி வழக்கு திருச்சி சிறார் நீதிமன்றத்திலும், மணிகண்டன் மீதான வழக்கு புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த புதுக்கோட்டை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லை என்ற போதும், மெட்டீரியல் எவிடென்ஸ் எனப்படும் தடயங்களை கொண்டு குற்றவாளிகளுக்கு போலீஸார் தண்டனை பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.