திருச்சி காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சிறப்பான முறையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்.
திருச்சி கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை அனுமதியுடன் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று வரை பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் செய்யப்பட்டு வந்தது.இன்று மதியம் மூன்று மணியிலிருந்து சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்க எடுத்துச் செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து காவிரி ஆற்று பாலத்தில் நேற்று முதல் திருச்சி மாநகராட்சி சார்பில் சிலைகளை பாதுகாப்பாக கரைக்க மூங்கில், சவுக்குகள் கொண்டு தடுப்புகள் கண்காணிப்பு கேமராவுடன் ஏற்படுத்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் காவல் துறை கண்காணிப்பு அறை ஆகியவற்றை சிறப்பாக தயார் செய்து இருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது சிலைகள் பாதுகாப்பாக கரைக்கப்பட்டு வருகிறது, திருச்சி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலைகள் செல்லும் வழிகளில் உள்ள டாஸ்மாக்குகள் 5 மணி முதல் மூடப்பட்டது.