தென்னிந்திய நடிகர் சங்க பேரவை கூட்டம் சென்று திரும்பிய உறுப்பினர்கள் விபத்தில் சிக்கி காயம். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் உதவி.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்திற்கு சென்று திரும்பிய போது விபத்து. உறுப்பினர்கள் காயம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலுள்ள உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்தவுடன், எக்மோர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் 5 உறுப்பினர்கள் சென்று உள்ளனர், அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்ட நிலையில், நாடக நடிகர் கண்ணன் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, மற்ற உறுப்பினர்களுக்கு பலத்த காயம் அடைந்தனர்,
உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன், நாடக நடிகர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் காப்பாளர் துணைத் தலைவர் பூச்சி முருகனுக்கு தகவல் அளித்த நிலையில் அவர் வழிகாட்டுதலின்படி கண்ணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரைப்பட நடிகர் SI கார்த்திக் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேலாளர் காமராஜ், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய நிர்வாக குழு உறுப்பினர் மணப்பாறை நடிகர் பண்ணை சிங்காரம், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏ ஆர் ஒ சிவா உடனடியாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உதவியுடன் அவர்களை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுப்பி வைத்தனர்.
பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட த்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் விபத்துக்கு உள்ளான நாடக நடிகர் கண்ணனிடம் தொடர்பு கொண்டு நடிகர் சங்கத்தின் வாயிலாக நலம் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…