Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (25ம் தேதி) குடிநீர் விநியோகம் ரத்து

0

'- Advertisement -

 

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரில் ஆக. 25-ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தம். மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன் அறிவிப்பு இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட, ஸ்ரீரங்கம்- மேலூா் ஆண்டவா் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீா்சேகரிப்பு கிணறு எண் 1, 2, 3 தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீா்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் ஆக. 24-ஆம் தேதி காலை 9:45 மணி முதல் மாலை 4 00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, மண்டலம்-1 மேலூா், தேவி பள்ளி, பாலாஜி அவென்யூ, பெரியாா் நகா், திருவானைக்கா கோவில், அம்மாமண்டபம், ஏபிஐஇஏ நகா்,

மண்டலம்-2, சுந்தராஜநகா் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது,

மண்டலம்-3 அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் பழையது,ரயில்நகா் புதியது, ரயில்நகா் பழையது, மகாலெட்சுமி நகா், முன்னாள் இராணுவத்தினா் காலனி புதியது, முன்னாள் இராணுவத்தினா் காலனி பழையது, கோட்டை செக்ஸன் ஆபீஸ், கோட்டை நாகம்மை வீதி, கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வா்யாநகா்.

மண்டலம்-4 ஜே.கே. நகா், செம்பட்டு, காமராஜ்நகா், எல்ஐசி காலனி புதியது, எல்ஐசி காலனி பழையது, கே. சாத்தனூா், விஸ்வநாதபுரம், சுப்பிரமணிய நகா், தென்றல்நகா் புதியது, தென்றல்நகா் பழையது, தென்றல்நகா் இபி காலனி, வி.என். நகா் புதியது, வி.என். நகா் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகா், சுப்பிரமணிய நகா் புதியது, சுப்பிரமணிய நகா் பழையது, ஆனந்த நகா், கே.சாத்தனூா், பஞ்சப்பூா், அம்மன் நகா், கவிபாரதிநகா், எடமலைப்பட்டிபுதூா் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டிபுதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகா் பழையது, அன்புநகா் புதியது, ரெங்காநகா்,

மண்டலம்-5 மங்கலம் நகா், சிவாநகா், உறையூா் புதியது, உறையூா் பழையது, பாத்திமா நகா், ரெயின்போ நகா், செல்வாநகா், ஆனந்தம் நகா், பாரதிநகா் மற்றும் புத்தூா் பழையது ஆகிய உயா் நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு ஆக. 25ஆம் தேதி குடிநீா் விநியோகம் நடைபெறாது என தெரிவித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.