என்ஜிஓ பெடரேஷன் சார்பில்
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா.
‘சாலைபாதுகாப்பு
உயிர் பாதுகாப்பு’
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு 32-வது சாலை தேசிய பாதுகாப்பு மாதமாக ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை ‘சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்தினால் உயிரிழக்கின்றனர்.
உலக அளவில் வாகன எண்ணிக்கையில் இந்தியா ஒரு சதவீதத்தை மட்டும் கொண்டிருந்தாலும் விபத்துகள் நடப்பதில் 10 சதவீதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை மீறுவதே ஆகும்.
விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கமும், தனியார் தொண்டு நிறுவனமும் மட்டுமல்லாது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை என்ஜிஓ பெடரேஷன் தலைவர் ராஜா வழங்கினார். துணைத் தலைவர் கவிதா செயலாளர் வில்பர்ட் எடிசன் இணைச்செயலாளர் உமாமகேஸ்வரி, பொருளாளர் அன்பழகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உட்பட பலர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
மேலும் வாகனம் ஓட்டுபவற்களிடையே
போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும்
வாகன உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்ட வேண்டும்,
நான் எனது பெற்றோருக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் வாகனம் ஓட்டும்போது பெல்ட், ஹெல்மெட் அணிந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்துவேன்.
நான் வேக கட்டுப்பாட்டை மீறாதவாறு பார்த்துக்கொள்வேன்.
வாகன ஓட்டுனர் வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பேச அனுமதிக்கமாட்டேன்.
என வாகன ஓட்டுனர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்