திருச்சியில் தந்தையின் உடலை விட்டு சென்ற மகள்
பத்து நாட்களாக பிணவறையில் இருந்த சடலம்.
உற்றார், உறவினர்கள் வேண்டுகோளுக்கிணங்க
ஈமச்சடங்கு செய்து
நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்
ஈம சடங்கு செய்த தம்பதியினர்
பார்வதி நாதன் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர்,
29 ஜனவரி 2021 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவரது மகள் கண்ணம்மாவால் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனளின்றி 29 ஜனவரி 2021 இரவு 10 மணி அளவில் இயற்கை மரணம் அடைந்து விட்டார்.
தந்தை இறந்த செய்தி கேட்டு அவரது உடலை பெறாமல் மகளும் சென்றுவிட்டார்.
இறந்த நபர் உடலில் தங்கம் , வெள்ளி உட்பட எவ்வித ஆபரணங்களும் இல்லாத நிலையில் உடல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி சுந்தரர் தெருவில் வசிக்கும் உடன் பிறந்த சகோதரர் சங்கர் தகவல் அறிந்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தாயார் மகாலட்சுமி தங்கைகள் ரேவதி, கஸ்தூரி உள்ளிட்டோருடன் இறந்த பார்வதி நாதன் உடலை திருநெல்வேலி கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய இயலாத சூழலில் திருச்சியிலேயே நல்லடக்கம் செய்திட கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதனடிப்படையில் திருச்சி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்க்கு
7 பிப்ரவரி 2021 ஞாயிறு அன்று மாலை
தகவல் தெரிவிக்கப்பட்டது,
தகவலின் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், செல்வி கீர்த்தனா, வினைசெய் அறக்கட்டளை கார்த்தி, இப்ராஹிம், இஸ்மாயில், பாலகிருஷ்ணன், ஜெய்குமார், முகமது சுல்தான், நவாப் உள்ளிட்ட தன்னார்வலர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் இருந்த பார்வதி நாதன் பிரேத உடலை அரசு மருத்துவமனை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் பெற்று திருச்சிராப்பள்ளி அண்ணாநகர் மயானத்தில் இறந்த பார்வதி நாதன் சகோதர, சகோதரிகள் உற்றார் உறவினர்கள் முன்னிலையில்
7 பிப்ரவரி 2021 ஞாயிறு அன்று மாலை
நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் வசித்துவரும்
பார்வதி நாதன் சகோதரர் சங்கர் கூறுகையில், பிச்சைபிள்ளை, மகாலட்சுமி தம்பதியினருக்கு 5 குழந்தைகள்.
2 ஆண்கள் 3 பெண்கள். இருபது வயது இருக்கும்போது பார்வதிநாதன் தாணு என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார், அவருக்கு செண்பகவல்லி, கண்ணம்மாள் என 2 பெண் குழந்தைகள் இருந்தனர். திருச்சி, திருப்பூர், பொள்ளாச்சி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் மொசைக் கல் பதிக்கும் தொழிலை பார்வதிநாதன் செய்து வந்தார். மனைவி தாணு, மகள் செண்பகவல்லி காலம் ஆகிவிடுகிறார்கள். மற்றொரு மகள் கண்ணம்மாள் அரசு மருத்துவமனையில் தனது தந்தை பார்வதி நாதனை உள்நோயாளியாக சேர்க்கின்றார். சிகிச்சை பவனின்றி காலமான தன் தந்தைக்கு இறுதி சடங்கு செய்யாமல் சென்றுவிட்டார். இறந்து பல நாட்கள் ஆவதால் மகளை தொடர்பு கொள்ள அலைபேசியில் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியாததால் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தகவல் அளித்து தாயார் மகாலட்சுமி சகோதரிகள் ரேவதி கஸ்தூரி சகோதரர் சங்கர் ஆகிய நான் சம்பவ இடத்திற்கு வந்து அரசு மருத்துவ மனையில் இருந்து பிரேதத்தை பெற்று அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வினைசெய் அறக்கட்டளை சமூக தன்னார்வலர்கள் மூலம் நல்லடக்கம் செய்தோம் என்றார்.