Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

Ad banner

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரும் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம்.

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து திரு அவைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை இணைந்து நடத்தும் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரும் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் ஜான்சன் துரை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐ திருச்சி தஞ்சை மண்டல பேராயர் சந்திரசேகரன், திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ், டி இ எல் சி பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட எஸ்சி எஸ்டி பணிக்குழு செயலாளர் அந்துவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பொது நிலையினர் பணிக்குழு மாநில செயலாளர் பூபதி லூர்துசாமி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிராங்க்ளின் சீசர் தாமஸ், பல் சமய உரையாடல் மன்ற இயக்குனர் சார்லஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

முன்னதாக சிஎஸ்ஐ திருச்சி மறை மாவட்ட தலைவர் ராஜாமன்சிங் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆசிரியர் பணி செயலாளரும்.தேசிய தலித் கிறிஸ்தவ பேரவை உறுப்பினருமான லூயிஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.