பாரதிதாசன் பல்கலைக்கழக மான்பமைத் துணை வேந்தர் முனைவர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் ஆலோசனைப் படியும், திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் பேரிடர் தயார் நிலை குறித்த ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் அழகப்பன் மோசஸ் தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேரா.க. வெற்றிவேல், திருச்சி மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் ஜி.இராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியருமான பேரா.இரா.குணசேகரன் பேரிடர் குறித்து நோக்கவுரை நிகழ்த்தினார். எக்ஸ்டன்சன் ஆக்டிவிட்டி இணை முதன்மையர் பேரா.ஆர்.எம்.சாம் தேவா அசீர் யூத் ரெட் கிராஸ் தன்னார்வளர்களை பாரட்டி ஊக்கவுரை நிகழ்த்தினார்.
பயிலரங்கின் தொடக்கமாக
முதல் அமர்வில் இந்தியன் ரெட் கிராஸ் முதலுதவி பயிற்றுநர் ஜெ.பெஞ்சமின் ஆபத்தில் உள்ளோர்க்கு முதலுதவி எவ்வாறு செய்வது என்பதை பயிற்றுவித்தார்.
இரண்டாவது அமர் இலவ இந்தியன் ரெட் கிராஸ் வழிகாட்டு குழு உறுப்பினர் கே.குணசேகரன் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்றுவித்தார்.
மூன்றாவது அமர்வில் மன ஆரோக்கியம் குறித்து பிஷப் ஹீபர் கல்லூரி சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் எம்.ரீனா ரிபெல்ல பயிற்றுவித்தனர்.
நிகழ்வின் நிறைவாக யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் பேரா. த.கிப்சன் நன்றியுரை வழங்கினார்.
பயிலரங்கில் 200 மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.