திருச்சியில் அமமுக சார்பில் கோடநாடு கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி நாளை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளரும்,47 வது வார்டு மன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆணைக்கிணங்க,
அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதின் அறிவிப்பு படி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடித்திட வலியுறுத்தி “திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயில் அருகில்” நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
‘
மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், மற்றும் அனைத்து நிலையில் உள்ள சார்பு அணி நிர்வாகிகள், மற்றும்,முன்னாள் இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.
என ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.