திருச்சியில் 2வது மோட்டார் வாகன வழக்கு நீதி மன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார்,அமைச்சர்கள் கே.என்.நேரு மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.
திருச்சியில்
2-வது மோட்டார் வாகன விபத்து வழக்கு நீதிமன்றம் திறப்பு
உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
மோட்டார் வழக்கு தொடர்பான திருப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. மேலும் 2-வது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் துவக்கி வைத்தார்.
மோட்டார் வழக்கு தொடர்பான இழப்பீடு உள்ளிட்ட தீர்ப்புகள் தாமதமாவதை தடுக்கும் வகையில் விரைந்து தீர்ப்புகள் வழங்கப்பட ஏதுவாக இந்த 2வது நீதிமன்றம் செயல்பட உள்ளது.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு,
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,
திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா
மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கலந்து ஏராளமானோர் கொண்டனர்.