திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக குழு தலைவர் அம்பிகாபதி பேசுகையில், எனது கோரிக்கையை ஏற்று திருச்சி- புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் முதல் செம்பட்டு வரையிலான சாலையின் மையப்பகுதியில் எனது கோரிக்கையை ஏற்று மின்விளக்கு அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எனது வார்டில் விமான நிலையம் வயர்லெஸ் சாலை புதுப்பிக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் 2 மாத காலத்தில் மழை காலம் தொடங்கிவிடும் ஆகையால் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும். எனது வார்டு பசுமை நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படும் என்று மேயர் ஆய்வின்போது தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது வரை இதற்கான பணிகள் தொடங்கவில்லை ஆகையால் உடனடியாக மேல்நிலை நீர் தொட்டி அமைத்துக் கொடுத்து வார்டு மக்களுக்கு சிரமம் இன்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொருள் மீதான விவாதத்தின் போது 43வது பொருள் குறித்து அம்பிகாபதி கடந்த மே மாதம் 14ஆம் தேதி அமைச்சர் நேரு தலைமையில் தமிழக அரசு அரசன் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கக் கூட்ட நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பந்தல் மேடை முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகள் பயனாளிகளுக்கான இருக்கைகள் அரசு அலுவலர்களுக்கான இருக்கைகள் மேசை மற்றும் இதர பணிகள் அமைத்து கொடுத்த வகையில் ரூ.56.80 லட்சம் செலவினத்திற்கான ஒப்புதல் பெறுவதற்காக மாமன்றத்தில் 43வது தீர்மானமாக கொண்டுவரப்பட்டது .
இதன் மீது அம்பிகாபதி பேசுகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த அரசு விழாவுக்கு ஏற்க எதற்காக மாநகராட்சி செலவு செய்தது எவ்வளவு பெரிய தொகையை மாநகராட்சி நிதியிலிருந்து செலவிடப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெளிவுபடுத்த வேண்டும் மேலும் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் செலவு செய்திருந்தால் இது இரட்டிப்பு செலவாக அமையும் ஆகவே இந்த பொருள் குறித்து விவாதம் நடத்திய பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.