மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.விபச்சார தடுப்பு பிரிவை சேர்ந்த 2 எஸ்.ஐ. உள்ளிட்ட 3 பேர் திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம்.

திருச்சி மசாஜ் சென்டரில், பாலியல் தொழில் நடத்தியதை கண்டுகொள்ளாத விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் 3 பேர், ஆயுதப்படைக்கு மாற்றம்.
திருச்சி, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்திய போது, மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, மசாஜ் சென்டர் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலுக்கு மசாஜ் சென்டரில் தங்க வைத்திருந்த மூன்று பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே, அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்த நிலையில், அதை கண்டு கொள்ளாத விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,க்கள்
பால சரஸ்வதி, ராஜ்மோகன் மற்றும் போலீஸ்காரர் அசாலி ஆகியோரை, நேற்று ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து, திருச்சி போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா உத்தரவிட்டுள்ளார்.

