திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி
பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம்
பொன்மலை பகுதி சார்பில் பொன்மலைப்பட்டி M.E.L.I.M. தொடக்கப்பள்ளியில்
மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் K.N சேகரன் ஆகியோரின் தலைமையிலும்.
*பொன்மலை பகுதி செயலாளர் E.M.தர்மராஜ்*
அவர்களின் முன்னிலையிலும் பொதுமக்கள் பயன்படும் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், பலரும் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.