திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கழிவறை சென்ற
காதல் மனைவி மாயம் .
தஞ்சை மாவட்டம் பாபநாசம் கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 28) இவர் காற்றாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனின் தாயுடன் சூர்யா சின்ன சேலம் செல்ல திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வந்தார். அப்பொழுது சூர்யா கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று கூறிய சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடிப் பார்ததும் சூர்யா எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து கன்டோன்மென்ட் போலீசில் மணிகண்டன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன சூர்யாவை தேடி வருகின்றனர்.