டாக்டர் வேணி எழுதிய நூல் அறிமுக விழா
திருச்சி நகைச்சுவை மன்றம், ராக்ஃபோர்ட்
நரம்பியல் மையம் இணைந்து நடத்திய மூளை நரம்பியல் நிபுணர் அ. வேணி எழுதிய நலவாழ்வு 40 – நம் கைகளில் என்ற நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி நகைச்சுவை மன்ற அறங்காவலர் எம். பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மருத்துவர் கலையரசன் முன்னிலை வகித்தார்.
இதில், திருச்சி கூடுதல் சார்பு நீதிபதி எம்.மகாலட்சுமி, நூலினை அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினார்.
மருத்துவர் ஜெய்கிஷ் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினரும். சித்த மருத்துவருமான கு. சிவராமன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில், திரளான மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிறைவில் திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் க.சிவகுருநாதன் நன்றி கூறினார்.