இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இனியாவது பொதுமக்களின் நலனுக்காக போராடுவார்களா?
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாஜக பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி.
இன்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டச் செயலாளர் அஞ்சுகம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் திருச்சி ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த முற்றுகை போராட்டத்தை கண்ட பொதுமக்கள் .
இவர்களுக்கு பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தெரியாதா,மின் கட்டணம் உயர்வு,மாநகர் முழுவதும் சாலைகள் மேடு பள்ளமாக உள்ளது,சுகாதார சீர்கேடுகள் போன்ற பொதுமக்களின் அடிப்படை வசதி குறித்து போராடவில்லை,போலி மதுபானம் மற்றும் கள்ள சாராயம் குடித்து அப்பாவி பொதுமக்கள் உயிர் இழந்ததற்கு காரணமான திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை,
தேவை இல்லாமல் தலைநகரில் உள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்காக போராடுவதாக கூறி இவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பாதுகாப்புக்காக 50 போலீசாரின் பணி நேரத்தை வீணடித்து,
இதுவும் இல்லாமல் ஓட்டலில் இவர்களை தங்க வைத்து காலை தேனீர், மதிய உணவு, மாலை தேனீர் என காவலர்களுக்கு வீண் செலவும் கூட.
இனியாவது திருச்சியிலும் தமிழகத்திலும் உள்ள பிரச்சினை பற்றி போராடாமல இது போன்ற வீண் போராட்டங்களில் ஈடுபடாமல் மக்கள் நலனுக்காக இவர்கள் போராடுவார்களா. என அந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்து சென்ற பொதுமக்கள் கூறி சென்றனர்.