திருச்சியில் தென்னக தொடர் கல்வி குழுமம் சார்பில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள SC0PE நிறுவனர் சுப்புராமன் அவர்களுக்கு,
அமைப்பின் செயலாளர் இராஜா முத்திருளாண்டி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கூட்டத்தில் வழக்கறிஞர் தர்மராஜா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தொண்டு நிறுவன தலைவர்கள் சமூக நல ஆர்வலர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் நேரு யுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், சேவை அமைப்பை சேர்ந்த பத்மினி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக சுப்புராமன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை OZONE பொருளாளர் நாராயணன், தலைவர் கோவிந்தராஜ், இணைச்செயலாளர்வழக்கறிஞர் வேதாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.