முத்தரையரின் மணிமண்டபத்தை வரும் 23ம் தேதிக்கு முன் திறக்க கோரி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கலெக்டரிடம் மனு.
கட்டி முடிக்கப்பட்ட பேரரசர் முத்தரையரின் மணிமண்டபத்தை திறக்க கோரி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவிற்கு முன்பு திறக்கப்பட வேண்டிய நிலையில், ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் இன்று திறக்கப்படாமல் உள்ளது.
ஆகவே வருகின்ற மே-23ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்னதாக மணிமண்டபத்தை திறக்க ஆவணம் செய்யுமாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கலந்துகொண்டவர்கள் செயற்குழு உறுப்பினர் பார்த்திபன்மாவட்ட பொதுசெயலாளர்கள் காளீஸ்வரன் ஒண்டி முத்து பொன். தண்டபாணி. மாவட்ட நிர்வாகிகள் சந்துரு மணிமொழி சர்வேஸ்வரன் ஜெயந்தி நாகேந்திரன் மணிமேகலை வேளாங்கண்ணி மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சி. இந்திரன் பாலக்கரை மண்டல தலைவர் மல்லி செல்வம் .மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.