லட்சுமி மழையர் தொடக்கப்பள்ளி, சோழன் கலை ஊற்று,மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஓவிய கண்காட்சி. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கிராமத்தை நோக்கி, தமிழர் வாழ்வின் அழகியலை பறைசாற்றும் ஒவியர் சித்தன் சிவா-வின் பிரம்மாண்ட ஒவியக் கண்காட்சி தொடக்க விழா.
சோழன் கலை ஊற்று, மக்கள் சக்தி இயக்கம் மற்றும் லெட்சுமி மழலையர் & தொடக்கப்பள்ளி
இணைந்து நடத்தும்
ஓவியக் கண்காட்சி இன்று திருவெறும்பூர், ஜெய்நகர், கு.காமராசர் அரங்கம்,
தமிழர் வாழ்வின் அழகியலை பறைசாற்றும் ஓவியர் சித்தன் சிவா -வின்
-பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சித் தொடக்கவிழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ.
கே.என்.சேகரன் தலைமையில் நடந்தது.
வந்தவர்களை மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர், தண்ணீர் கே.சி.நீலமேகம் வரவேற்றார்.

கண்காட்சியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கண்காட்சியில் கிராமத்தில் நடக்கும் விழா, கோவில் திருவிழா, காளை அடக்கும் ஒவியம், மற்றும் பல வகையான ஒவியங்கள் உள்ளது.
கண்காட்சியில் அரவிந்த் சிலம்பம் குழுவினர், பாலா சண்முகம், ஜெகன்நாத், தங்கவேலு ,செல்வராஜ், கருணாநிதி , சிவக்குமார், மாணவ, மாணவிகள் , பொதுமக்கள் கலந்துக் கொண்டார்கள் .
முடிவில் ஓவியர் சுரேஷ்கனி நன்றி கூறினார்.
குறிப்பு :
இவ்ஓவியக் கண்காட்சி வியாழன் வெள்ளி ஆகிய இரு தினங்கள் நடைபெறும்.
இவ்விரு நாட்களில் மாணவர்களுக்கு இலவச ஓவியப்பயிற்சி கற்றுத்தரப்படும்.