திருச்சி திமுக தெற்கு மாவட்டம், 12 வது வட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி திமுக தெற்கு மாவட்டம், 12வது வட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும்,
நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மிக பிரம்மாண்டமாய் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் பொய்யாமொழி நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியினை 12வது வட்ட பிரதிநிதிகள் அகமது பாதுஷா, நூர் முகமது.வட்ட பொருளாளர்.சித்திக்சிரால் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், இஸ்லாமிய பிரமுகர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.